Header Shelvazug

http://shelvazug.com/

அரசியல் பிரச்சினையினை சட்டப்பிரச்சினையெனும் கூட்டமைப்பு!


கடந்த 03 ம் திகதி வெள்ளிக்கிழமைபடையினர் யாழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டதேடுதல் நடவடிக்கையின் போதுமாணவர் ஒன்றியஅலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பழைய புகைப்படத்தை வைத்திருந்தனர் என்பதற்காகவும்,மருத்துவபீடசிற்றுண்டிச்சாலையில் தியாகி திலீபனின் படத்தை வைத்திருந்தார் என்பதற்காகவும் யாழ் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளரையும்,சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் பங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்  கைதுசெய்துசிறையில் அடைத்துள்ளனர். இப்புகைப்படங்கள் இருந்தமைக்காக கைது செய்வது அற்பத்தனமான நடவடிக்கை ஆகும். ஆயுதங்களைத் தேடவந்தவர்கள் அற்பத்தனமான காரணங்களுக்காக கைது செய்தமையை பல தரப்புக்களையும் சீற்றங்கொள்ள வைத்துள்ளது.

தென்னிலங்கையில் ஆயுதப்போராட்டத்தை நடாத்திய ஜே.வி.பி இன் தலைவர் ரோகண விஜேவீராவின் படத்தினை      அக்கட்சியினர் பட்டிதொட்டியெங்கும் வைத்திருக்கின்றனர்.  அங்குஎவரும் கைது செய்யப்படவில்லை. இங்கு மட்டும் கைது செய்திருப்பது அற்பத்தனமான அரசியல் காரணங்களுக்காகவே ஆகும். தங்களுடைய ஆட்சி அதிகார நலன்களுக்கு புலிகள் மீளஎழுச்சியடைகின்றனர் என்ற கற்பனைக்கதை அவர்களுக்கு தேவையாக உள்ளது. அதற்காக மாணவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர். 

மாணவர்களும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டமை சட்டப்பிரச்சனையல்ல.  அரசியல் பிரச்சனையே ! அரசியல் பிரச்சனையை அரசியல் வழிமுறைகளின் மூலமே தீர்க்கவேண்டும். எமது அரசியல் தலைமை இதனை ஜனாதிபதி பிரதமரோடு பேசித்தீர்ப்பதற்கு பதிலாக சட்டமா அதிபருடன் பேசி சட்டப்பிரச்சனையாக திசை திருப்பமுற்படுகின்றது. இந்த திசை திருப்பலையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசின் பங்காளிகளாகச் செயற்பட்டு அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவளித்த எமது அரசியல் தலைமைக்கு இது விடயத்தில் பொறுப்புணர்வு இல்லாதது மிகவும் கவலையளிக்கின்றது. 

முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழ்த்தரப்பின் அமெரிக்கதலமையிலானமேற்குலகசார்புஅரசியலுக்காகதமிழ்க் கிறிஸ்தவர்களையேபெருமளவு இலக்குவைத்தனர்,தொடர்ந்தும் இலக்குவைப்பதற்குவாய்ப்புக்கள் இருக்கின்றன. படையினர் போர்க்காலமனோநிலையிலேயேதற்போதும் இருக்கின்றனர். ஆட்சிஅதிகாரத்திற்குவரத்துடிக்கும் தரப்பினர் தமிழ்ப் பிரதேசத்தின் அமைதிநிலையைக் குழப்பவிரும்புகின்றனர். சொற்பகாலம் நடைமுறையிலிருந்த ஜனநாயகவெளிதமிழ் மக்களுக்குதற்போதுமுழுமையாகஅடைக்கப்பட்டுள்ளது. காணிப் பறிப்புவிவகாரம்,அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம்,அரசியல் தீர்வுவிவகாரம்,அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நிலைமாறுகாலநீதிக்கான ஜெனிவாத் தீர்மானங்களும் நடைமுறைக்குவருவதற்கானவாய்ப்புக்கள் அருகியுள்ளன இந்நிலையில்தற்போதுஉயிர் பாதுகாப்புபிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் பலவந்தமாக முடக்கப்பட்டுள்ளன. 

கட்டமைப்புசார் இன அழிப்புக்கள் தொடரக்கூடிய சூழலேஉண்டு. எனவேஎந்தவிதபாதுகாப்புமற்று இருக்கும் தமிழ் மக்களுக்குசர்வதேசப் பாதுகாப்பைகோருகின்றோம்.குறைந்தபட்சம் ஐ.நா கண்காணிப்புஅலுவலகம் உடனடியாகதமிழ்ப் பிரதேசங்களில் உருவாக்கப்படவேண்டும்  எனக் கோருகின்றோம். சாட்சியமற்றமுள்ளிவாய்க்கால் அழிவுபோல இன்னோர் அழிவுவருவதைதமிழ் மக்கள் அறவேவிரும்பவில்லைஎன்பதையும் இது விடயத்தில் சுட்டிக்காட்டுகின்றோம். 

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தாக்குதலில் தமிழ் கிறிஸ்தவர்களும்,சிங்களகிறிஸ்தவர்களும்,வெளிநாட்டவர்களும் இலக்குவைக்கப்பட்டுள்ளனர். ஒருவெளிநாட்டுவிவகாரத்திற்காக இத்தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. சர்வதேசபுலனாய்வுப் பிரிவினர்களின் முன்கூட்டியஎச்சரிக்கைகள் அசட்டைசெய்யப்பட்டுள்ளமையினால் ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்குமிடையில் தொடர்புள்ளதாஎன்றசந்தேகம் எழுகின்றது. இந் நிலையில் இலங்கைமட்டம் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்குநீதிகிடைக்கும் எனக் கூற முடியாதுஎனவே இது விடயத்தில் சர்வதேசவிசாரணைவேண்டும் எனக் கோருகின்றோமென சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரியுள்ளது.

No comments