சகபாடிகளை கைதூக்க சொன்ன சம்பந்தன்?


இலங்கையின் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டாமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கோரிக்கை விடுத்திருந்த போதும் அதனை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிராகரித்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெற்கு குண்டுவெடிப்பினையடுத்து அவசரகாலச் சட்டத்தை பேண அரசு முற்பட்டுள்ள நிலையில் அதற்கு முண்டுகொடுக்க இரா.சம்பந்தன் முற்பட்ட போதிலும்; பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஏற்கவில்லையென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கான மீளாய்வு சபையின் முதலாவது கூட்டம் நேற்று (24) பிற்பகல் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில்,மஹிந்த மற்றும் சம்பந்தர்,ஆளுநர்கள் முப்படை தளபதிகள் என பலரும் பங்கெடுத்த கூட்டமாக அது அமைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments