பிடித்துவிடுவிக்கின்றது இராணுவம்: பாயும் மனோ!


இலங்கை காவல்துறை தனது கணக்குகாட்டும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட பின்னராக பருத்தித்துறை புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. இதன்போது இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் சீருடைய ஒத்த வடிவமைப்புடைய துணிகளான ஆடைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அதில் சிறுவர்களின் ஆடைகளும் உள்ளடங்கும். அவற்றை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 தமிழ் வர்த்தகர்களும் 7 முஸ்லிம் வர்த்தகர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 11 பேரையும் செவ்வாய்க்கிழமை இரவு பதில் நிதவான் சுப்பிரமணியம் இல்லத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த நபர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

ஆனால் மறுபுறம் நாட்டில் சில இடங்களில் இடம்பெறும் வன்முறைகளைத் தடுப்பதற்காக, இணையத்தள தீவிரவாதத்தை கட்டுபடுத்த வேண்டுமென, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் தவறானத் தகவல்கள் வழங்கப்பட்டு, மக்களை தவறாக வழிநடத்தி, இதன்மூலம் பாடசாலை மற்றும் சகல பிரிவினரையும் அழிப்பதற்கு இடமளிக்கப்படாதென்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments