நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளருக்கு 90 நாள் விளக்கமறியல்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரை 90 பொலிஸ் தடுப்பில்வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் கண்டியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள அவரது வதிவிடத்தில் வைத்து, இவரை குருணாகல் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

சந்தேக நபருக்கு தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்து சபாநாயகருக்கு அறிவித்த பின்னர், பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

Parliamentary translator to be detained for 90 Days
சந்தேக நபர், 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற பணியாளராக இணைந்து கொண்டார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தீவிர செயற்பாட்டு உறுப்பினரான, இவர், அதன் தலைவர் சஹ்ரானின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் சந்தேக நபர் சில நாள்கள் மாத்திரமே பணிக்கு வந்துள்ளார்.

குருணாகல் மருத்துவமனையில் பணியாற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்ததை அடுத்தே, நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்கள் இரகசியமாக அக்குரணவில் கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

No comments