பொதியுடன் நின்ற நபரால் பதற்றம்!

யாழ் சாவகச்சேரியில் உள்ள பாடசாலையொன்றுக்கு முன்னால் அமைந்த பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் பொதியுடன் நின்ற நபரால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதியுடன் நின்ற நபரை அவதானித்த மாணவர்கள் விடயத்தை  அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அதிபர் காவல்துறைக்கு தகவல் வழங்க  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சந்தேக நபரை  சோதனையிட்டனர்.

ஆனால் பொதியை சோதனையிட்டபோது பொதிக்குள் ஒன்றும் இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments