நிரபராதி அஜந்தன் விடுதலையில் நடந்தது என்ன?


வவுணதீவு பொலிஸார் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என வீண்பழி சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் இன்று விடுதலைசெய்யப்பட்டார்.
பாதுகாப்பு தரப்பினர் அவரது இல்லத்திற்கே வந்து அவரை குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.

கடந்த சில நாட்களாக அரசியல்வாதிகள் தாம் நடவடிக்கை எடுக்கிறோம் என சுயலாபம் தேடிக்கொண்டிருந்தனர் இன்றும் கூட அஜந்தனோடு கதைத்தார் என முகப்புத்தகத்தில் அரசியல் செய்வதை காணக்கூடியதாக உள்ளது!

உண்மையில் நடந்தது என்ன?

கைது செய்யப்பட்ட 3 மாதத்திலேயே அவருக்கான அனைத்து சட்டநடவடிக்கைகளும் எம்மால் ஒழுங்குபடுத்தப்பட்டது! அந்த மூன்று மாதத்திலேயே அவரது குடும்பத்தாருடன் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்றிருந்தோம்.
தொடர்ந்து ஐ.சி.ஆர்.சி இடம் சென்றிருந்தோம் ,
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சென்றிருந்தோம் எவருமே எந்த உதவியும் செய்யவில்லை!

பின்னர் அடுத்த மூன்று மாதம் டி.ஓ அடிக்கப்பட்ட்டது. அவ்வேளை எமது உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஐக்கியநாடுகள் அலுவலகம் வரை இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டது அவர்களூடாக
மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு  அறிவுறுத்தப்பட்டது அவர்கள் அஜந்தன் அவர்களின் விடுதலைக்கான சகலநடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தனர்.
வழக்கறிஞர் சார்ந்து உதவிபுரிய எமது அமைப்பினர் முன்வந்தனர்.

பின்னர் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
தற்போது வவுணதீவுபொலிசாரின் கொலையை குற்றவாளிகள் தாமாகவே  உரிமையேற்றதை தொடர்ந்து கடந்தவாரம் அஜந்தன் அவர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தனர்.

பொலிசாரின் தரப்பில் அவரை விடுதலை செய்யுமாறு கேட்கப்பட்டது, மனிதஉரிமை அமைப்பின் சார்பிலும் மூன்று சட்டவாளர்களும்  விடுதலை செயயும்படி வாதாடியிருந்தார்கள் ஆனால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை !
ஏனென்றால்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தில்
 அவருக்கு இரண்டாவது தடவை  அடிக்கப்பட்ட "டி.ஓ ஐ ரத்துசெய்யும்படி" குறிப்பிடவில்லை எனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின்  அக்கடிதம் தேவை என கூறப்பட்டது.

இன்றையதினம் அனுமதி கிடைத்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார.

எந்த அரசியல்வாதிகளும் இவருக்காக ஆரம்பத்தில் குரல்கொடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி இவரைப்போல எத்தனயோ நிரபராதிகள் குற்றமேதுமிழைக்காமல் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு பொது மன்னிப்பு என்ற வகையிலோ வேறுஏதாவது வகையிலோ விடுதலை பெற்றுக்குடுக்க முடியாத அரசியல்வாதிகள் சிலர்,
குற்றவாளி அல்ல என நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிரபராதியை நான் எடுத்தேன் ,நான் கதைத்தேன் என கூறி அரசியல் செய்கிறார்கள்!

உண்மையில் இவ்வாறான விடயங்கள் சார்ந்து அரசியல் பின்னனி இல்லாத இளைஞர்கள், அமைப்புக்கள் சுயநலமில்லாது எவ்வளவோ இன்னல்களை எதிர்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.

இவ்வகையில் மனிதஉரிமை ஆனைக்குழு மற்றும் எம்சார்பாக இணைந்த சட்டத்தரனிகளுக்கும் நன்றி!

இதேபோல ஓரிரு நாட்களில் மாணவர் விடுதலையின் பின்னரும் அரசியல்வாதிகள் இதைத்தான் கூறப்போகிறார்கள்.

இப்படிக்கு
- இவ்விடயம் சார்ந்து செயற்பட்ட அமைப்பு -

No comments