ஆயுததாரிகளுக்கு 48 மணி நேர காலக்கெடு

சட்டவிரோதமான முறையில், கத்தி, வாள், போன்ற கூரிய ஆயுதங்கள், குண்டுகள் அல்லது வேறு வெடிபொருட்கள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள், 45 மணித்தியாளத்துக்குள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க, பொது மன்னிப்புக் காலமொன்று வழங்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்ன அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றை ஒப்படைத்தால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தவறின், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

No comments