'ஊரகப் பேரொளி" 2019 கிராமிய கலை நடனப்போட்டி!


பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி நான்காவது தடவையாக நடாத்திய 'ஊரகப் பேரொளி" கிராமிய கலை நடனப்போட்டி – 2019 கடந்த 27.04.2019 சனிக்கிழமை சார்சல்
பகுதியில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக கேணல் சங்கர் அவர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

மண்டப வாயிலில் வரவேற்பு விளக்கினை சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. டக்லஸ் அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அண்மையில் சிறிலங்காதேசத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மங்கள விளக்கினை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்கள், பிரதம விருந்தினர் பிரதம நடுவர் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கலைகலாசாரபீட பேராசிரியர் திரு.பாலசுகுமார் அவர்கள், ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி  பொறுப்பாளர் திரு. ரூபன், மதிப்புக்குரிய பாலசுகுமார் அவர்கள், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் ,Val d'Oise  நாடாளுமன்ற உறுப்பினர் François Pupponi அவர்கள், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்கள், கலாசார நலன் காப்பக நிறுவனத்தின் சார்ந்த Nadine Delarue  அவர்கள், மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள், அனைத்துலக கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு.முகிலன் அவர்கள்,
நடுவர்களாகக் கடமையாற்றியவர்களான திருமதி கௌரிகரன் உசாநந்தினி அவர்கள், திருமதி இரவீந்திரன் பிறேமளாதேவி அவர்கள், செல்வி ஹெரால்ட் ஜொசிட்டா பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம அவர்கள், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத் தேர்வுப் பொறுப்பாளர் திரு.அகிலன் அவர்கள், ஐரோப்பிய தமிழர் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. கிருபாகரன் அவர்கள் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், கட்டமைப்பு பொறுப்பாளர்கள், ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி உறுப்பினர்கள், பாரம்பரிய வாத்திய இசைகளுடன் இன்னியம் அணிவகுப்புடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

Val d'Oise   நாடாளுமன்ற   உறுப்பினர் François Pupponi உரையினைத் தொடர்ந்து, அவருக்கு  ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி  பொறுப்பாளர் திரு. ரூபன் அவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி மதிப்பளிப்புச் செய்தார்.

தொடர்ந்து கிராமிய போட்டி நிகழ்வின் நடுவர்கள் மேடையில் மேடையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு, மதிப்பளிக்கப்பட்டனர். இந்த மதிப்பளித்தலினை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள் வழங்கியிருந்தார்.
ஊரகப்பேரொளிக்காக பிரான்சு கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பாடல் திரையில் ஒளிபரப்பாகியது. வரவேற்புரையை திருமதி வாணி தியாகராஜா அவர்கள் வழங்க வரவேற்பு நடனத்தை செல்வி முத்துராஜா சுவேத்திக்கா வழங்கியதுடன் அறிமுகவுரையை முன்னாள் அதிபர், ஆசிரியர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

தமிழர்களின் வீரத்திலும், தீரத்திலும் உறைந்துபோன முழவு
க்கருவியான பறை இசையை மூத்த கலைஞர் திரு.பரா அவர்களின் குழுவினர் சிறப்பித்திருந்தனர்.
தொடர்ந்து நடுவண் பிரிவுக்கான போட்டிகள் ஆரம்பமாகி நிறைவடைந்ததும் இடைவேளையையடுத்து, ஊரகப்பேரொளியின் இரண்டாவது பாடல் காண்பிக்கப்பட்டது.
"சீனத்தமிழன்" William Chian (வில்லியம் சியான்) அவர்களின் பெண்குரல் பாடல் தமிழில் ஒலித்ததைத் தொடர்ந்து, உயிரிழை முள்ளம்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்புக்கு நிதி சேகரிக்கப்பட்டது. சிற்றுரைகளை திரு.பாஸ்கரன் (இலங்கை பழைய மாணவர் சங்கம் சார்பாக), சார்சல் நகரபிதா Patrick Haddad  ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

ரிரிஎன் தமிழ்ஒளி  தொலைக்காட்சி சார்பாக  சார்சல் தமிழ் சங்கத்தினால் சார்சல்  நகரபிதா மதிப்பளிப்பு செய்யப்பட்டார். பொன்னாடையை திரு.கணேஸ் கணபதிப்பிள்ளை அவர்களும், நினைவுப் பரிசினை, சங்கத் தலைவர் திரு. டக்லஸ், மற்றும் திரு.மணிவேந்தன் ஆகியோர் வழங்க, Nadine Delarue   அவர்களின் மதிப்பளித்தலினை சார்சல் சங்க உறுப்பினர் ஒருவர் பொன்னாடை போர்த்தினார்.

தொடர்ந்து கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு, உயர்பிரிவு போட்டிகள் இடம்பெற்றிருந்த அதேவேளை,
சிறப்ப நடனத்தை வெர்சைல் சங்க நிர்வாகத்தினர், ஆசிரியர், பெற்றோர் மற்றும் வட்டுக்கோட்டை நாடக கூத்து கழகத்தின் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்பன இடம்பெற்றன.
பயிற்றுனர் மதிப்பளிப்பு (பிரதம விருந்தனர், பிரதம நடுவர் திரு பாலசுகுமார் மற்றும் ஆசிரியர் திருமதி லதா ராஜன் அவர்களால்)

பிரதமவிருந்தனர் பிரதம நடுவர் திரு.பாலசுகுமார் அவர்களின் சிறப்புரையினைத் தொடர்ந்து
திரு.பாலசுகுமார் அவர்களின் 'ஒரு தேவதையின் சிறகசைப்பு" நூலிற்கான முன்னுரை ஆசிரியர் திருமதி லதாராஜன் அவர்கள் வழங்க நூல் பற்றிய உரையினை திரு. பாலசுகுமார், திரு. அகிலன் ஆகியோர் வழங்கியிருந்னர். தொடர்ந்து நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.
சிறப்புரைகளை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள், திரு.செல்வநாயகம் தசரதன் சார்சல் சங்கச் செயலாளர் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
சித்தோரியா கராத்தே கழகத்தின் சிலம்பாட்டம், கராத்தே சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றிருந்தன.

நன்றியுரையினை ஆசிரியர் திருமதி லதாராஜன் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து
 உயிரிழை முள்ளம் தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்புக்கு ஆதரவு வழங்குவதற்காக ரிரிஎன் தமிழ்ஒளி  நடாத்திய நல்வாய்ப்பு சீட்டிழுப்பும்  நல்வாய்ப்புப் பார்க்கப்பட்டு வாழைக்குலை வழங்கப்பட்டது.

ரிரிஎன் தமிழ்ஒளி  நிர்வாக பொறுப்பாளர் திரு. சோதிராசா அவர்களால் நடுவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
மேலதிகமதிப்பளித்தலை நிழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சௌந்தா அவர்கள் வழங்கியிருந்தார். திரு.ரவி, திரு.சிவா, செல்வன் சங்கீர்தன், அறிவிப்பாளர் திரு. கிருஸ்ணா, அறிவிப்பாளர் செல்வி சோபிகா ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

போட்டியில் பங்குகொண்டு வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு பரிசில்களை சிறப்பு விருந்தினர்களும் நடுவர்களும் செயற்பாட்டாளர்களும் வழங்கியிருந்தனர்.
4 ஆவது ஊரகப்பேரொளி 2019 இன் வெற்றியாரம் நடன ஆசிரியை திருமதி றொணி செல்வராஜ் (திரான்சி மற்றும் சேர்ஜி தமிழ்ப்பள்ளி மேற்பிரிவு கரகாட்டம்) அவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை ரிரிஎன் தமிழ்  ஒளி தொலைக்காட்சி பொறுப்பாளர் திரு.ரூபன் அவர்கள் வழங்கி மதிப்பளித்திருந்தார்.
நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் உரைத்து நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


போட்டி முடிவுகள் :

கீழ்ப்பிரிவு
1) செல் தமிழ்ப்பள்ளி செம்பு நடனம்
(நடன ஆசிரியை திருமதி. வினோதா செந்தூரன்)
2) எவ்றி குக்குரோன் தமிழ்ப்பள்ளி குறவன் குறத்தி நடனம்
(நடன ஆசிரியை திருமதி. பபிதராணி ரகுதாஸ்)
3) வில்நெவ் சென் ஜோர்ஸ் தமிழ்ப்பள்ளி கோலாட்டம்
(நடன ஆசிரியை திருமதி. சிவநாதன் அம்பிகாபதி)

நடுவண் பரிவு
1) செல் தமிழ்ப்பள்ளி சுளகு நடனம்
(நடன ஆசிரியை திருமதி. வினோதா செந்தூரன் )
2) சேர்ஜி தமிழ்ப்பள்ளி சுளகு நடனம்
(நடன ஆசிரியை திருமதி. றொணி செல்வராஜ்)
3) நுவாசி லு குரோன் தமிழ்ப்பள்ளி வேப்பிலை நடனம்
(நடன ஆசிரியை திருமதி. வினோதா செந்தூரன்)

உயர்பிரிவு
1) வெர்சாய் தமிழ்ப்பள்ளி தப்பாட்டம்
(நடன ஆசிரியை திருமதி. டெஸ்மினி டார்வின் )
2) செல் தமிழ்ப்பள்ளி பின்னல் கோலாட்டம்
(நடன ஆசிரியை திருமதி. வினோதா செந்தூரன்)
3) திரான்சி - சேர்ஜி தமிழ்ப்பள்ளி தப்பாட்டம்
(நடன ஆசிரியை திருமதி. றொணி செல்வராஜ்)

4ம் ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2019 நடன ஆசிரியை திருமதி றொணி செல்வராஜ் (திரான்சி மற்றும் சேர்ஜி தமிழ்ப்பள்ளி மேற்பிரிவு கரகாட்டம்)

No comments