வலி தெற்கு பிரதேச சபையில் சர்ச்சையாய் வெடித்த மகளீர் தினம்
வலி. தெற்கு பிரதேச சபையின் மகளிர் தினத்திற்கு அழைப்பிதழ் விடாது கொண்டாடப்பட்டதன் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈ.பி.டி.பிக்கும் இடையேயான டீல் உள்ளதா? என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தவராஜா துவாரகன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வலி.தெற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“உலக மகளிர் தினத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்ததிலும் தலைமை தாங்கியதிலும் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் சபையில் உதவி உள்ளூராட்சி ஆணையாளரை பிரதம விருந்தினராக அழைப்பதற்கு பரிந்துரை செய்திருந்தோம்.
பிரதம விருந்தினரை மாற்றியது யார், சபையின் அனுமதி பெறப்பட்டா மாற்றியமைக்கப்பட்டது எவ்வாறு, விருந்தினர்களாக தவிசாளர்களை அழைத்தது யார், ஏன் பெண் உறுப்பினர்களை கௌரவம் படுத்தவில்லை, சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டதா? சபை சின்னத்தினை மேற்கொண்டு அழைப்பிதழ் பிரசுரிக்கப்பட்ட காரணம் என்ன, உறுப்பினர்கள் அவ்வாறான சின்னம் பாவிக்க முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
மகளிர் தினத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஈபிடிபியினருமே சேர்ந்து நடத்தினர். பிரதம விருந்துனராக அழைக்கப்பட்ட கூட்டுறவு மாவட்ட செயளாளரை ஈபிடிபியினரே அழைத்தனர். கௌரவ விருந்தினர்களாக தவிசாளர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே அழைத்தனர். எனவேதான் கட்சி சார்பாக நடைபெற்ற விழாவினை புறக்கணித்தோம்” என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தவராஜா துவாரகன் தெரிவித்தார்.
Post a Comment