என்னை தோற்கடிக்க 40 கோடி இறக்கிய பாஜக! திருமா காடடம்!

இந்திய மக்களவை தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரமாகச் சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பொதுமக்களை சந்தித்தும் வாக்கு சேகரித்து வருகிறார். இந் நிலையில் கடந்த வாரம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து தீட்சிதர்களிடம் ஆறுதலாக அமர்ந்து  பேசி அவர்களிடம் வாக்கு கேட்டிருந்தார். இது பாஜக வினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு ஒளிப்படங்கள் செய்திகளுடன் பரப்பப்பட்டு வருகிறது.

இதற்க்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல் பிரச்ச்சாரம் ஒன்றில் திருமாவளவன்  பேசும்போது  ``விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் நாடளுமன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று பாஜகவினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வும், பாஜகவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அதற்கு காரணம் நான் பாஜக, அ.தி.மு.க. மதவாதம் ஆகியவற்றை எதிர்த்து பேசுவதுதான். ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுவதாலும் எதையும் கண்டித்து பேசுவதாலும் ஆத்திரத்தில் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கி உள்ளனர்'" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments