தமிழர் தாயகத்தில் நினைவேந்தப்பட்ட அன்னை பூபதி!

அறப்போர் அன்னை பூபதியின்31ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழர் தாயகத்தில் நினைவேந்தப்பட்டது.

மட்டக்களப்பில் பூபதி அன்னையின் சமாதியில் தமிழ்தேசியகூட்டமைபினரால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் அன்னைபூபதியின் குடும்பஉறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் முன்னாள்பாராளுமன்றஉறுப்பினர்பா.அரியநேத்திரன், பொதுச்செயலாளர்கி.துரைராசசிங்கம்,முன்னாள்கிழக்குமகாணஉறுப்பினர்மா.நடராசா, வாலிபர்முன்னணிதலைவர்லோ.திபாகரன், மாநகரசபைபிரதிமுதல்வர்கே.சத்தியநாதன்,உள்ளிட்டபலர் கலந்துகொண்டு ஈகச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் தண்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி  அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு அன்னையை நினைவேந்திக்கொண்டனர்.
No comments