வானூர்தி நிலையத்தில் தற்படம் (செல்பி) எடுத்தால் மரணதண்டனை!!

தாய்லாந்தில் வானூர்தி நிலையத்தின் முன் தற்படம் (செல்பி) எடுத்தால் மரணதண்டணை வழங்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

தாய்லாந்து பூக்கெட் மாநிலத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது வானூர்தி நிலையம். மாய்காவோ கடற்கரையோரமாக வானூர்தி தாழப்பறந்து தரையிறங்குவதைப் பார்ப்பதற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவது வழமை.

சுற்றுலாப் பயணிகள் தாழப் பறக்கும் வானூர்தியுடன் தற்படம் (செல்பி) எடுப்பது வழங்கம். தரையிறங்கும் வானூர்தியில் வானோடியின் கவனம் சிதைவடைவதால் விபத்துகள் நோிடக்கூடும் எனக்கூறி அப்பகுதி மாகாண அரசு தற்படம் எடுக்கத் தடை விதித்துள்ளது.

தடையை மீறி தற்படம் எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை வழங்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பு சுற்றூலாத்துறையை அதிகம் பாதிக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments