மருத்துவர்கள் வேலைநிறுத்தம்! ஜெர்மனியில் நோயாளிகள் அவதி!

ஜெர்மனி  முழுவதும் இன்று புதன்கிழமையிலிருந்து  நீண்ட வேலை நேரங்கள் மற்றும் குறைந்த ஊதியம் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தம் செய்வதாகமருத்துவர்கள்  அறிவித்துள்ளனர்.

இதனால் பல்வேறு மருத்துவமனைகளில்  முக்கிய  அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன, இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். எனினும்
பல மருத்துவமனைகளில் அவசர சேவைகள் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல முதுநிலை மருத்துவர்கள்  பிராங்பேர்ட்டில் பேரணியில் ஈடுபட்டதோடு , சிறந்த ஊதியம் மற்றும் தங்களுக்கு வேலைகளுக்கு ஏற்ற சாதக அம்சங்களை அரசு உருவாக்கி தர கோரியுள்ளனர்.

No comments