முஸ்லிம் விவகார அமைச்சு ஆதரவா?



இலங்கைக்குள் முஸ்லீம் மத பிரச்சாரகர்கள் என்ற பேரில் தீவிரவாதிகள் உள்நுழைந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.இவர்கள் எப்படி நுழைவிசைவு பெற்றனர், அவர்களுக்கான இருப்பிட வசதிகளை செய்து கொடுத்தது யார் என்பன போன்ற விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, முஸ்லிம் விவகார அமைச்சின்; அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த அமைச்சு முற்றுமுழுதாக முஸ்லீம் அமைச்சர்கள் வசமேயிருந்துள்ளது.அதனால் குறித்த அதிகாரிகளது பங்களிப்புடனேயே அனுமதி வழங்கப்பட்டிருக்கவேண்டுமென சநதேகிக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா நுழைவிசைவு மூலம், சிறிலங்கா வந்துள்ள இஸ்லாமிய போதகர்கள் பலரும், இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், மத போதனை மற்றும்  அரபுமொழியை கற்பித்து வருகின்றனர்.

இவற்றின் ஊடாகவே, அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன்,  இவ்வாறான மதப் பாடசாலைகளை தடை செய்யுமாறும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையிலேயே 600 வெளிநாட்டவர்களை,  வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சிறிலங்கா பிரதமர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

No comments