மஸ்கெலியா பள்ளிவாசலில் 47 கத்திகள் மீட்பு: ஒருவர் கைது!

மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 47 கத்திகள் மீட்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையினால் இன்று சனிக்கிழமை மஸ்கெலியா நகரில் காவல்துறையினரும் இரானுவத்தினரும் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த பள்ளிவாசலில் 47கத்திகள் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவத்துடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இக்கத்திகள் பள்ளிவாசலின் களஞ்சியறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இக்கத்திகள் எப்படி களஞ்சியறைக்குள் வந்தது என்பது தெரியாது என கைது செய்யப்பட்ட நபர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படட சந்தேக நபர் நாளை ஞாயிற்றுகிழமை அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான்
முன்னிலையில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.No comments