ஆய்வுக்காக நகுலேஸ்வரம் சென்ற ஆளுநர்!கீரிமலை நகுலேஸ்வரத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கீரிமலைக்குச் சென்றிருந்தார்.

ஆலய நிர்வாகத்துடன் கலந்துலந்துரையாடிய ஆளுநர்,  கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளை ஆவணபடுத்தி தருமாறு வடக்கு மாகாண சுரேன் ராகவன் ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர், மீள்குடியேற்றம், இடம்மாசடைதல் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன.

ஆலய நிர்வாகம் , மக்கள் மற்றும் இராணுவத்தினருடன் கலந்தாலோசித்து மீண்டும் ஓர் சந்திப்பினை ஏற்படுத்தி இவற்றை எவ்வாறு படிப்படியாக முன்னேற்றலாம் என்று யோசிப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

#Keerimalai Naguleswaram #Keerimalai 

No comments