வாக்களித்தால் சாப்பாடுக்கு விலைக்கழிவு! பிரச்சாரத்தில் புது யுக்தி!

தமிழகத்தில் வரும்  18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது நிலையில் 100  வீதம் வாக்களிக்க தமிழ்நாடு  உணவுவிடுதி உரிமையாளர்கள்  சங்கம்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர், அதாவது வரும் 18ஆம் தேதி தேர்தலில் வாக்களித்தால் உணவு விடுதியில் சாப்பிடுபவர்களுக்கு 10 வீதம் விலைக்கழிவு  என்று அறிவித்துள்ளது.

இந்த விலைக்கழிவை  மக்கள் தங்கள் கை விரலில் உள்ள மை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைக் காண்பித்துப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவை சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட முன்னணி உணவு விடுதிகளுக்கும் பொருந்தும். மேலும் இச்சலுகை 18ம் திகதி மாலை 6 மணிக்குப் பிறகே தொடங்கும் என்று தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளனர்.

No comments