சிறீலங்கா மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண பிரித்தானியா இணக்கம்!

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடிக்குத் தீர்வாக, அகற்றப்படும் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்த பிரித்தானியா பிரதி உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாவுரிஸ், இது தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தமது காரணங்களைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

குறைந்த விலையில் சுற்றாடலுக்கு பொருத்தமான மின்சார உற்பத்தி வேலைத்திட்டம் பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் முக்கிய மைல் கல்லாகும். மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தக் கூடிய சகல நீர் மூலங்களும் உயர்ந்தபட்ச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் மின்சார விநியோகம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக பிரதி உயர்ஸ்தானிகர் கூறினார்.

No comments