நானே 100 சதவீதம் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்! கோத்தபாய

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரொயிட்டர்ஸ் செய்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் பரவியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை என்னால் மட்டுமே தடுக்க முடியும்.

புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தடுக்க முடியும்.

யுத்தக்காலத்தில் தம்மால் கட்டியெழுப்பப்பட்ட தீவிர கண்காணிப்பு கட்டமைப்பையும், புலனாய்வு வலையமைப்பையும் பலவீனப்படுத்தாது இருந்திருந்தால் இவ்வாறு தாக்குதல்கள் எதுவும் இடம்பெற்றிருக்காது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசாங்கம் கட்டுப்படுத்தியிருக்க முடியும். இவ்வாறான வலி நிறைந்த சம்பவமும் இடம்பெற்றிருக்காது.

இந்த சூழ்நிலையில் தாமே 100 சதவீதம் நாட்டுக்கு பொறுத்தமான ஜனாதிபதி வேட்பாளராக இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments