செவ்வாய் கிரகத்தில் துளை போட்டது நாசா!

செவ்வாய் கிரத்தின் ஆய்வுக்காக கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்க அனுப்பியுள்ளது யாவரும் அறிந்ததே, அது இம்முறை நிலத்தடி பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதல் முறையாக சேகரித்து சாதனை படைத்துள்ளதாக நாசா பெருமிதம் அடைந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் NASA  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம், அண்மையில் நிலத்தடிப் பாறையொன்றில் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்துள்ளது. அந்த கிரகத்தில் தரையிறங்கிய 2,244ஆவது நாளில் அதாவது கடந்த 6-ஆம் தேதி இந்த சாதனையை கியூரியாசிட்டி செய்து முடித்துள்ளதாக ஆய்வு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஷார்ப் மலைப் பகுதியில், "களிமண் பிரிவு' என்றழைக்கப்படும் இடத்தில், அபெர்லேடி என்று பெயரிடப்பட்ட நிலத்தடிப் பாறையில் துளையிடப்பட்டுள்ளது.

 வெற்றிகரமாகத் துளையிட்டு, உள்பொருள்களை கியூரியாசிட்டியிலுள்ள கருவி மிக எளிதில் உறிஞ்சி எடுத்துள்ளதாகவும் சேகரிப்பட்ட மாதிரிகள், கியூரியாசிட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும்  அந்த மாதிரிகளின் தன்மைகள் குறித்து அந்த ஆய்வகம் சோதனைகளை செய்யப்படு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்,

 துளையிடும் கருவியை மட்டும் பயன்படுத்தி, செவ்வாய் கிரக மாதிரிகளை கியூரியாசிட்டி ஆய்வுக் கலம் சேகரித்துள்ளது இதுவே முதல் முறையாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தற்போது சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் தன்மையை அறிந்து கொண்டால், செவ்வாய்கிரகத்தில் நிலத்தடி நீர் இருக்குமா? என்பதைத் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளதால், அவை குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments