சாய்ந்தமருதுவில் அப்பாவிப் பெண் பலி! கணவன் காயம்!

கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இடைநடுவே சிக்கி பாத்திமா அஸ்ரிபா எனும் 21 வயதுடைய பெண்  ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மூன்று தொடக்கம் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவத்தரப்பினரை மேற்கொள்காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலில் 6 ஆண்கள், 3 பெண்கள், 6 சிறார்கள் என 15 பேர் கொல்லப்பட்டுள்னர் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

No comments