மரமுந்திரிகை திணைக்களமும் காணி பிடிக்கின்றது!



வனவளத்திணைக்களம்,வனஜுவராசிகள் திணைக்களமென தமிழ் மக்களது காணிகளை சூறையாடிவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினரின் பிடியில் இருந்த மரமுந்திரிகை தோட்ட நிலங்களை மரமுந்திரிகைத் திணைக்களமும் அபகரிக்கும் முயற்சியில் குதித்துள்ளது.

யுத்த முடிவின் பின்னராக நீண்டகாலபாக படையினர் வசமிருந்த பூநகரி மரமுந்திரிகைப் பண்ணை , வெள்ளாங்குளம் , கொண்டச்சி மர முந்திரிகைப் பண்ணைகள் என்பன தமது திணைக்களங்களிற்கு சொந்தமான நிலங்கள் எனவும் அவற்றினை தமது திணைக்களங்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என மாவட்டச் செயலகத்திடம் மர முந்திரிகைக் கூட்டுத்தாபனம் விண்ணப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் வெள்ளாங்குளத்தில் 500 ஏக்கரும் பூநகரியில் 474 ஏக்கர் நிலமும் கொண்டச்சியில் 450 ஏக்கர் நிலம் என்பனவற்றை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர். 

இந்த நிலையில் தமது நிலம் தொடர்பில் இறுதி முடிவினை எடுக்கவென கொழும்பில் கூட்டமொன்றிற்கு குறித்த திணைக்களம் அழைப்புவிடுத்துள்ளது.

No comments