கூட்டமைப்பு கம்பரலிய கனவு கலைந்தது!


கம்பரலிய எனும் கிராம மீள் எழுச்சி திட்டத்தை முன்னிறுத்தி தேர்தல் அரசியல் செய்ய முற்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு ஆப்படிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08) நடைபெற்றது. மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திணைக்கள உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனொல்ட், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போதே கம்பரலிய எனும் கிராம மீள் எழுச்சி திட்டத்தை முன்னிறுத்தி தேர்தல் அரசியல் செய்ய முற்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு ஆப்படிக்கப்பட்டுள்ளது.

குறித்த கம்பரலிய எனும் கிராம மீள் எழுச்சி திட்டத்தினை பிரச்சாரப்படுத்தவென ஜனாதிபதி,பிரதமர்,அமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களென பெயர் பலகை நாட்டப்படுவதில் பெருமளவு பணம் செலவிடப்படுவதாக சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு வந்த விடயத்தை தொடர்ந்தே அதற்கு தடை போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமந்திரன் கோவில் குளத்தை தூர் வாரி நாட்டிய பெயர்பலகை சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments