யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கடமையேற்குமாறு மத்திய சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான ரி.சத்தியமூர்த்தியை தற்போதைய பதவிக்கு மேலதிகமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் பணியாற்றுமாறே கோரப்பட்டுள்ளார்.

இவ்வாறு கோரப்பட்டுள்ளமை தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ,

குறித்த விடயம் தொடர்பில் இப் பதவிற்கான பற்றாக்குறை கருதி இரு நிலைகளையும் பணியாற்றுமாறு வாய்வரியாக கோரப்பட்டது. இரண்டும் மிகவும் முக்கியமான பணிகள் அதனால் பணியாற்றுவது சற்று கடினமான செயல் என்பதனை தெரிவித்திருந்தேன். இருப்பினும் அதனை அமைச்சு ஏற்கவில்லை.

இதேநேரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் பணியை பொறுப்பேற்குமாறு எழுத்தில் இதுவரை உத்தரவு கையில் கிடைக்கவில்லை. எனத் தெரிவித்தார்.

No comments