நாய்கள் போல கத்தவேண்டாமென்கிறார் மைத்திரி!


கூட்டமைப்பினரை நாய்கள் போன்று கத்தவேண்டாமென மைத்திரி எச்சரித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.மைத்திரிபால சிறிசேன தலைமையிலான வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நேற்றைய செயலணி அமர்வில் நில விடுவிப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கத்தி பேசியதையடுத்தே  இது நாடாளுமன்றம் அல்ல இங்கே நாய்கள் போல உரத்துக் குரல் எழுப்ப முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடிந்துகொண்டார்.

வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் மைத்திரி தலைமையில் கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நில விடுவிப்புத் தொடர்பிலேயே அதிக நேரமும் நீண்ட சர்ச்சையும் இடம்பெற்றது. இதன்போதே மைத்திரி மேற்கண்டவாறு  எச்சரித்ததாக பெயர் சொல்ல விரும்பாத அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டார்.

கடந்த கூட்ட அறிக்கையிலும் ஐ.நா கூட்டத்தொடரிலும் மக்களின் 90 வீதமான நிலம் விடுவிக்கப்பட்டதாக பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு 90 வீதமான நிலம் விடுவிக்கப்பட்டிருப்பின் அவற்றின் விபரத்தை சமர்ப்பியுங்கள். அந்த விபரத்திலும் இங்கே கடந்த கூட்டத்துலும் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரத்து 900 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டதாக கூறுகின்றீர்கள் அவ்வாறு 24 ஆயிரத்து 900 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டிருந்தால் அதன் விபரத்தை தருமாறு கடந்த செயலணியில் கோரியபோது இம்முறை சமர்ப்பிப்பதாக கூறப்பட்டது. அவ்வாறானால் அதன் விபரம் எங்கே என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் படையினர் அதற்கு பதிலளிக்க மறுக்க படையினரை பார்த்து சிறீதரன் சீறவே நாய் மாதிரி கத்தவேண்டாமென மைத்திரி எச்சரித்திருந்தார்.

No comments