நீக்கப்படுகிறது மின்வெட்டு!


நாட்டில் முழுமையான மின் தேவையை நிறைவு செய்ய 300 மெகா வாட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளதால் வரும் 10ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் மின்வெட்டு நடைமுறை நீக்கப்படும் என்று இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். களனிதிஸ்ஸ் மின் உறுப்பத்தி நிலையத்துக்கு இன்று கண்காணிப்புக்குச் சென்றிருந்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.




“நாட்டில் ஏற்பட்டுள்ள 300 மெகா வாட்ஸ் மின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான வழிவகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பற்றாக்குறை கடந்த ஆண்டு தொடக்கம் உள்ளது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைத்தில் 500 தொடக்கம் 600 மெகா வோட்ஸ் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும்.அத்துடன் மின் நெருக்கடிக்குத் தீர்வு காண குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.

தேசிய மின் வழங்கலில் 3 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரத்து 500 மெகா வோட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நீண்டகாலத் திட்டத்துக்கான வரைவு அமைச்சரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்படவுள்ளது.


அதனால் குறுகிய காலத் தீர்வாக தேசிய மின் வழங்கலில் மேலும் 500 தொடக்கம் 600 மெகா வாட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றும் இலங்கை அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.

No comments