இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் சூடான் அதிபர்!

30 ஆண்டுகளாக சூடான் நாட்டின் அதிபராக இருந்துவந்த ஒமர் அல்-பஷீரை பதவியிலிருந்து நீக்கி சிறைப்பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சிறைப்பிடிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் அவாட் இப்னூ கருத்துத் தெரிவிக்கையில்:-

சூடான் அதிபர் பதவியிலிருந்து ஒமர் அல்-பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை சிறைபிடித்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

நாட்டின் நிர்வாகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு இராணுவ ஆட்சி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். அவசரகால நிலை மூன்று மாதங்கள் தொடரும். 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு ஊரடங்கு அமுலில் இருக்கும். ஊரடங்கு  ஒரு மாதத்திற்கு ஒருமுறை அமல்படுத்தப்படும். அனைத்து துறைமுகங்களும் மூடப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றத்தையும், வரும் இரண்டு இராணுவ ஆட்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது என சூடானின் வல்லுநர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர். அஹ்மத் அல்-மான்டஸர் தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவத்தினரின் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுவதாக அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

#Omar al-Bashir #sudan

No comments