இரணைமடு : பொறியியலாளர் இடமாற்றப்பட்டாரா?


இரணைமடுக்குளத்தின் வான்கதவுகளை தானே திறந்து வைக்க ஏதுவாக அதனை திறப்பதற்கு தாமதிக்க வைத்த பொறியியலாளர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முல்லைதீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.எனினும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வான் பாய்ந்து பாரிய அழிவு ஏற்பட்டமைக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகளின் தவறு காரணமா எனக்கண்டறிய ஆளுநரால் நியமித்த குழுவின் விசாரணை அறிக்கை வெளிவருமுன்னரே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக வடக்கு மாகாண உள்ளக அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் நீர்த் தேக்கமான இரணைமடுக் குளமானது அதன் கொள் அளவு 34 அடியில் இருந்து 36 அடியாக உயர்த்தப்பட்ட பின்பும் சுமார் 3 அடி நீர் வான் பாயும் நிலமை ஏற்பட்டிருந்தது. அவ்வாறு வான் பாய்ந்த நிலமையில் அதிகாரிகளின் அசட்டையீனத்தால் வெள்ள பெருக்கேற்பட்டதாக குற்றச்சாட்டு;க்கள் எழுந்திருந்தது.

இவ்வாறு எழுந்த விமர்சனத்தையடுத்து குறித்த அனர்த்தம் ஏற்பட்டமை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைகுழு அறிக்கை கடந.த வாரம் தற்போதைய ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வடக்கு மாகாண பிரதம செயலாளரிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அன்றைய தினம் இரவு விருந்தொன்றின் பின்னர் யாழ்.சென்றிருந்த அதிகாரி நிலைமையின் அவசரத்தினையடுத்து மீண்டும் கிளிநொச்சி திரும்பியுள்ளார்.அவர் வந்தடையும் வரை ஏற்பட்ட தாமத்தினால் குளம் நிரம்பியதையடுத்து திறந்துவிடப்பட்டதும் வெள்ள பெருக்கேற்பட்டதும் உறுதியாகியுள்ளது.

No comments