கம்பர்மலையில் வாள்வெட்டு - 08 பேர் வைத்திசாலையில்


கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் இந்திர விழாவின் போது கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கம்பரமலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. முரண்பாடு ஒரு கட்டத்தில் வாள்வெட்டு மோதலாக மாற்றமடைந்திருந்த நிலையில் 08 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் ஊரணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றும் பொலிஸார் கூறினர்.

No comments