செம்மணி சர்ச்சை: நாவற்குழி விகாரையை மறைக்கவா?

யாழ்ப்பாணம் செம்மணி நாவற்குழி பகுதி மத சர்ச்சைகளின் மையமாகியுள்ளது.கூட்டமைப்பினரது ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நாவற்குழி பௌத்த விகாரை தொடர்பான சர்ச்சைகளினை மூடி மறைக்க தற்போது செம்மணியில் சிவலிங்கம் அதற்கு போட்டியாக கிறீஸ்தவ மதப்பேனர்கள்; என பிரச்சாரங்கள் மும்முரமாகியுள்ளது.

செம்மணியில் அண்மையில் இரவோடிரவாக சிவலிங்கம் முளைத்திருந்த நிலையில் திடீரென நேற்றிரவு இரு இடங்களில் கத்தோலிக்க வாசகங்கள் அடங்கிய பேனர்கள் நாட்டப்பட்டிருந்தது. இதில் ஒன்று செம்மணிச் சந்தியிலும் இரண்டாவது குறுக்கு வீதியிலும் நாட்டப்பட்டிருந்தது.

எனினும் இவையிரண்டும் நேற்றிரவே இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.

செம்மணியினை சூழ தற்போது மத மாற்றத்தில் குதித்துள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள் பல முளைத்துள்ளது.

இதனிடையே இந்து கிறீஸ்தவ முரண்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலம் பௌத்த விகாரை கட்டுமான பணிகள் பற்றியோ அதற்கு கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேசசபை அனுமதி வழங்கியமை பற்றியோ தகவல்களை மறைப்பதற்கு முற்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

No comments