மாங்குளத்தில் பேருந்து குடைசாய்ந்தது

மாங்குளம் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments