சிறிலங்காவில் நாளை தேசிய துக்கதினம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாளை தினம் (23) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments