தாக்குதல் குறித்து அமெரிக்கா நேற்றும் இரு தடவை எச்சரிக்கை

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்றைய தினம் இரண்டு தடவைகள் முன்னெச்சரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளது.

முன்னதாக நேற்று மாலை முதலாவது எச்சரிக்கையை வெளியிட்டிருந்த அமெரிக்க தூதரகம், மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை உள்ளதாகவும், இதன் காரணமாக, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை தமது பிரஜைகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து, நேற்றிரவு மீண்டும் இரண்டாவது எச்சரிக்கையை விடுத்த அமெரிக்க தூதரகம், சுற்றுலாத் தளங்கள், அங்காடிகள், விருந்தகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் தொடர்பில், அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

No comments