18 பேர் நேற்றுக் கைது


இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களையடுத்து நாடளாவிய ரீதியில் கைதுவேட்டை தொடர்கின்றது.

நேற்றிரவு மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது 18 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்கம, பேருவளை, கட்டான மற்றும் வரகாப்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வரகாப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4 வேக்கி டோக்கிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments