மஞ்சள் போராட்டம் கலவரமானது!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனின் ஆட்சியில் பெற்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். இந்த போராட்டகாரர்கள் மஞ்சள் சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தி வருகின்றனர்.
18 வாரமாக தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போராட்டம் நேற்று கலகமாக மாறியது. கற்களை எழுத்தும்  பொது சொத்துகளை எரித்தும் போராட்டகாரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர்.
போராட்டத்தை கட்டுபடுத்த காவல் துறையினர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர். இந்நிலையில் இந்த கலவரத்தின்போது ஒரு கட்டடத்தில் தீ பிடித்துக் கொள்ளவே, அக்கட்டிடத்தில் இருந்த 11 பேரை சிறு காயங்களுடன் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

No comments