அரச செலவில் ஜெனீவா போனாரா இமானுவேல்?


ஜெனீவா சென்ற வணபிதா இமானுவேல் அரச தரப்பின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.எனினும் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைக்கும்வரை பாடுபடுவோம் ஜெனிவாவில்; எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்ததாக யாழ்.ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழருக்கு நீதி கிடைக்கும்வரை பாடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் ஜெனிவாவில் அரச குழுவிடம் தெரிவித்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு இந்த விசாரணை ஊடாக நீதி கிடைக்கவேண்டும். இது நிறைவேறும்வரை நாம் அயராது பாடுபடுவோமென அவர் தெரிவித்ததாக யாழ்.ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது..

இதனிடையே வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளாருக்கும் இடையில் இத்திடீர் சந்திப்பு இலங்கை தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமாவதற்கு முன்பு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் செயலகத்தில் நடைபெற்றதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட அரச குழுவினர் ஜெனிவா சென்றிருந்தார் எனவும் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

No comments