நீதிக்காக எழுச்சி கொண்டது யாழ் தேசம்!
சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பேரணியில், சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும், சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்தே இன்று சனிக்கிழமை இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்த பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகி, பேரணியாக நகர்ந்துசென்று யாழ் முற்றைவெளியில் நிறைவடைந்தது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள்
- கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும்.
- காலநீடிப்பு தமிழர் இருப்பை ஒழிக்கவா?
- 10 ஆண்டுகள் ஏமாற்றியது போதாதா?
- சர்வதேசமே போர்க் குற்றவாளியைப் பாதுகாக்காதே
- நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்து
- அரசைப் பாதுகாப்பதா? அல்லது மக்களைக் பாதுகாப்பதா? ஐநாவின் உருவாக்கம்
- அரசியல் கைதிகளை விடுதலை செய்
- மனிதப் புதைகுழிகளின் களமா? தமிழர் தாயகம்
- அரசியல் கைதிகளை விடுதலை செய்
- மனிதப் புதைகுழிகளின் களமா? தமிழர் தாயகம்
போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளைத் தாங்கியவண்ணம் பேரணி முற்றைவெளியை நோக்கி நகர்ந்து சென்றது.

Post a Comment