எரிமலை குமுறுகிறது! மக்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஹவாயி தீவுகளில் அமைந்திருக்கும் Kilauea எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது.

எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைக் குழம்புக்கு அஞ்சி அதனருகில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியவண்ணம் உள்ளனர்.
கடந்த இரு நாட்களாக அந்த பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

இதை தொடர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு Puna பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்

No comments