ஒரே நாளில் 750க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம்!

இந்திய உச்சநீதிமன்றத்தில் நேற்று மட்டும் 750க்கும் மேற்பட்ட வழக்குகளை தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரின் அமர்வு விசாரித்துள்ளனர். 

ஒரே நாளில் இத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கு மேல் நகராமல் உள்ளது. இவற்றை குறித்து தெரிந்துக் கொள்ள அமர்வு 750 வழக்குகளை எடுத்துக் கொண்டது. இந்த வழக்குகளில் வரிசை எண் 12 முதல் 751 வரை உள்ள வழக்குகள் குறைபாடுள்ள வழக்குகள் ஆகும்.

No comments