மதுபோதையில் வாகனம் செலுத்தினால் இனி மரணதண்டனை; அதிரடி சட்டம்!

மது அருந்தி விட்டு வாகனம் செலுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க தைவான் நாட்டின் அரசாங்கம் அதிரடி முயற்சி எடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தி  மற்றவர்களுக்கு உயிர்  ஆபத்துக்களை  விளைவித்தவராயின் அவருக்கு புதிதாக திருத்தப்பட உள்ள  அந்தச் சட்டம் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைவானிய அமைச்சரவை, இம்மாதம்  28ஆம் தேதி சட்டத் திருத்தம் தொடர்பான வரைவுக்கு ஒப்புதல் அளித்ததுள்ள வேளையில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தால் அது சட்டம் உறுதியாகுமென தெரிவிக்கப்படுகிறது.

No comments