புலிகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியே கொலைச்சதியாம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரினைக் களங்கப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் சுத்துமாத்து சுமந்திரனும்  சுமந்திரனது அடிப்பொடிகளும் தயாராகிவருகின்றனர்.

முன்னர் சுமந்திரனைக் கொல்வதற்கு முன்றதாகக் கூறி விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது பாதாள உலகக் குழுவை வைத்து சுமந்திரனைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக புதுப் புரளியை கிளப்பிவிட்டுள்ள சுமந்திரன் தரப்பு தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்களை தோண்டி எடுத்து அதனை தென்னிலங்கையில் உள்ளவா்களுக்கு விற்பனை செய்ததாகவும் அந்த ஆயுதங்களை பயன்படுத்தியே சுமந்திரனைப் படுகொலை செய்ய திட்டமிட்டதாகவும் புதிய கதை ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளது எனவும் அதற்கு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் காட்டி புலிகளைக் களங்கப்படுத்தும் நாடகத்தினை அரங்கேற்றத் தொடங்கியுள்ளதோடு தேர்தல் வரவுள்ளதால் எஸ்.ரி.எவ் பாதுகாப்பு மற்றும் சேதனைக் கெடுபிடிகளுக்குள் மக்களைச் சிக்கவைக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.

இதேவேளை சுமந்திரனின் விசுவாசியான யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக அண்மையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments