வில்பத்து பகுதிக்கு திடீர் விஜயம்?


வில்பத்து பகுதிக்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும இன்று காலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

முசலி பிரதேசத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் வில்பத்து பகுதிக்கு சென்று வன பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது கொழும்பில் இருந்து வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் வருகை தந்ததோடு, முசலி வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சருடன் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் விடுவிப்பு செய்யப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மரிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி உள்ளிட்ட இடங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

கல்லாறு அமைச்சுக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்த்துள்ளார்.

அதனை தொடர்ந்து விளாத்திக்குளம் பகுதியில் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட இடமும் பார்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளமையும் இராஜாங்க அமைச்சரால் அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments