சீனாவா?அமெரிக்காவா?:தமிழ் மக்களிற்கு தெரியுமென்கிறார் அமெரிக்க தூதர்?



இலங்கையில் மனித உரிமைகள் பற்றியும் தமிழ் மக்களிற்கு தீர்வொன்று கிடைக்கவேண்டுமென்பது தொடர்பிலும் யார் பாடுபடுகின்றார்கள்,அதற்காக தமிழ் பகுதிகளிற்கு வந்து செல்பவர்கள் யாரென்பது தமிழ் மக்களிற்கு நன்கு தெரியுமென தெரிவித்துள்ளார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். 

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்று யாழ்ப்பாணத்துக்குப் வருகை தந்திருந்தார். இதன்போது அவர், வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

இந்நிலையில் யாழ்.ஊடக அமையத்திற்கு இன்று மாலை வருகை தந்த அவரிடம் இவ்வாண்டு இலங்கையில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் மஹிந்த தரப்பும் ரணில் தரப்பும் போட்டியிட்டு களமிறங்கவுள்ளனர்.

இத்தகைய சூழுலில் சீன தூதரும் மற்றொரு பக்கம் நீங்களும் வடக்கிற்கு வருகை தந்துள்ளீர்கள்.

எதிரும் புதிருமான இரு தரப்புக்கள் யாழிற்கு வருகை தந்துள்ளமைக்கு அரசியல் பின்னணிகள் இருக்கின்றதாவென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆதற்கு பதிலளித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் அமெரிக்க தூதர்களும் தூதரக அதிகாரிகளும் யாழ்ப்பாணம் வருவது இதுதான் முதல் தடவையல்ல.இங்கு மனித உரிமைகள் மேம்பட வேண்டுமென்பது தொடர்பிலும் தமிழ் மக்களிற்கு அதிகார பகிர்வு வழங்கப்படவேண்டும்,காணாமல் போனோர் விவகாரம் மற்றும் காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் அக்கறை  கொண்டிருப்பவர்கள் யாரென்பது பற்றியும் தமிழ் மக்களிற்கு நன்கு தெரியுமென பதிலளித்திருந்தார்.  


No comments