கோத்தபாயவின் அரசியல் பயணம் 8ம் திகதி வெள்ளி?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவது நிச்சயமாகியுள்ளது.எதிர்வரும் 8ம் திகதி கண்டியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவின் பகிரங்க அரசியல் பிரவேசம் ஆரம்பிக்கிறது.

குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் நிலவிய குழப்பங்கள் முடிவிற்கு வந்ததையடுத்து, வரும் 8ம் திகதி கோத்தபாயவின் பகிரங்க அரசியல் பிரவேசம் ஆரம்பிக்கிறது.


குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் நிலவிய குழப்பங்கள் முடிவிற்கு வந்ததையடுத்து, வரும் 8ம் திகதி கோத்தபாயவின் பகிரங்க அரசியல் பிரவேசம் ஆரம்பிக்கிறது.

மைத்திரிபாலவையே ஜனாதிபதி வேட்பாளராக்குவதென்ற முடிவில் மஹிந்த ராஜபக்ச இருந்தாலும், அண்மைய நாட்களில் கோத்தபாய ராஜபக்ச தரப்பின் அழுத்தம் அதிகரித்திருந்திருந்தது. ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமிக்காவிட்டால் தனி அணியாக போட்டியிடுவேன் என்றும் அவர் மஹிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே கூறியிருந்தார்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதால், 20வது திருத்தத்திற்கும் அவர் ஆதரவளிக்கமாட்டார் என தெரிகிறது. கோத்தபாய ராஜபக்ச மீது நீதிமன்ற வழங்குகள் உள்ளன. இப்பொழுதே ஜனாதிபதி வேட்பாளராக அவரை பகிரங்கப்படுத்தினால், வழக்குகள் இறுக்கப்படும் வாய்ப்புள்ளதாக ராஜபக்ச குடும்பம் கருதுகின்றது.

No comments