ஐதேகவிற்குள் கருத்து மோதல் - நாளை கூடுகிறது நாடாளுமன்றக் குழு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (05) இரவு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.


பாதீட்டு விவாதத்துக்கான நேர ஒதுக்கீடு, பின்வரிசை எம்.பிக்களின் கோரிக்கை உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படும் என தெரியவருகின்றது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க வேண்டும் என ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்கள் சிலர் வலியுறுத்திவருகின்றனர்.

அத்துடன், ஐ.தே.கவிலுள்ள இரண்டு அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் வாக்களிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், தமது கட்சி அத்தகையதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை என  ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று சுட்டிக்காட்டினர். இதனால், இவ்விவகாரம் குறித்து ஐ.தே.கவுக்குள் கருத்து மோதல் வெடித்துள்ளது.

இது பற்றியும் நாளைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

No comments