வடக்கு எங்கும் சூறாவளி பயணம்?


நாளையதினம்  யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள   மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான வாகன பேரணி,கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஊடாக மீண்டும்  யாழ்ப்பாணத்தை சென்றடைந்து போராட்டத்திற்கான வலு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
அந்தவகையில்  குறித்த வாகன அணி நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று, முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முள்ளியவளை ஒட்டுசுட்டான்  நெடுங்கேணி பகுதி ஊடாக வவுனியாவை  சென்றடைந்துள்ளது
குறித்த நகர்ப்பகுதிகளில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக மக்களை போராட்டத்திற்கு அழைக்கும்  முகமாக துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.
அதோடு அனைத்து தரப்பினரையும் நாளையதினம்  (16ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களுக்கான நீதி கிடைப்பதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments