உலகின் மிகபெரிய டைனோசார் கண்டுபிடிப்பு!

கனடாவின் மேற்குப் பகுதியில் 1991இல்  கண்டுபிடிக்கப்பட்ட T ரெக்ஸ் (Tyrannosaurus rex)  உலகின் ஆகப் பெரிய டைனோசார் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
'Scotty' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த டைனசாரின் தொல்படிமம்  மீது படிந்திருந்த எமணற்கல்லை அகற்றி அதற்கு முழு வடிவம் கொடுப்பதற்கு பத்தாண்டுகள் நீடித்ததாம்.
Scotty' 13 மீட்டர் நீளமும் 8,800 கிலோகிராம் எடையும் கொண்ட மாபெரும் உயிரினம் என இப்போது கணிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  டைனோசர்களில்  இதுவே ஆகப் பெரியது என்பது உறுதியாகி இருக்கிறது.

No comments