சந்திரிகாவிற்காக பல்டியடித்த வவுனியா வடக்கு பிரதேசசபை?


தமது தேவைக்காக எதனையுமே புரட்டிப்போட்டு அரசியல் செய்வது கூட்டமைப்பின் வழக்கமாகும்.அவ்வகையில் வடமாகாணசபையால் அம்மாச்சியெனும் பேரில் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரிய உணவகத்தை வன்னி அறுசுவையாக பெயர் மாற்றவும் அதனை செம்மணி படுகொலை நாயகி சந்திரிகாவினை கொண்டு திறந்து வைக்கவும் கூட்ட தீர்மானத்தை மாற்றியெழுதி சாதனை படைத்துள்ளது கூட்டமைப்பு வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேசசபை.

கடந்த மாதம் நடைபெற்ற பிரதேச சபை அமர்வில் நாளை நடைபெற உள்ள நிகழ்விற்கு யாரை அழைப்பது என சுமார் 30 நிமிடங்களாக விவாதிக்கப்பட்டு ,றுதியில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரையும் நெடுங்கேணி பிரதேச செயலாளரையும் பிரதம விருந்தினர்களாக அழைப்பது என தீர்மானிக்கப்பட்டு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இன்றைய தினம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடந்த மாத கூட்ட அறிக்கையில்  முன்னாள் ஜனாதிபதி சத்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவை பிரதம விருந்தினராக அழைப்பதாகவும் வன்னி அறுசுவையகமாக பெயர் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபையின் உத்தியோகபூர்வ மாதாந்த கூட்ட அறிக்கையினையே திரிபுபடுத்தி போலி கூட்ட அறிக்கையினை தயாரித்துவிட்டதாக எதிர்தரப்புக்கள் குரல் எழுப்பியுள்ளன.

இதனிடையே வவுனியா வடக்கு பிரதேசசபையின் ஒரு பகுதி உறுப்பினர்கள் சந்திரிகாவினை அழைத்துள்ளமை மற்றும் அம்மாச்சி பெயர் மாற்றப்பட்டமைக்கு  கண்டனம் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இன்றைய நிகழ்வை புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

No comments