தரையில் இருந்து பரீட்சை எழுதும் கிளிநொச்சி மாணவர்கள்கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேற்று பாடசாலை விடுமுறை நாளன்று குளவிகள் வகுப்பறைகளை ஆக்கிரமித்துக்கொண்டமையால்  பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பதட்டத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தை விடுத்து நிலத்தில் இருந்து பரீட்சை எழுதியுள்ளனர். 
இவ்வாறு அடிக்கடி குளவிகள் பாடசாலையில் குடி கொள்வதனால் மாணவர்களின் வழமையான செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. 
அவ்வாறே தொடர்ச்சியாக குரங்குகளின் தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. பாடசாலை சமூகம் பல மட்டங்களுக்கும் எடுத்துச் சொல்லியும் இதுவரை எந்த பயனும் இல்லை.

No comments