சவேந்திர சில்வாவை விசாரணை செய்ய இராணுவம் மறுப்பு

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த  சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கடுமையான கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை நடத்த சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க,

“மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் உள்ளக விசாரணைகளை நடத்தாது.

அதற்குப் பதிலாக, சிறிலங்கா இராணுவம் மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்ற காரணத்தை கண்டறிவதற்காக, உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று நடத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments